Time: 2:38 PM

பேராவூரணியில் உலக வெறிநோய் தடுப்பு தினம்

பேராவூரணி செப்28:
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ரோட்டரி சங்கம், கால்நடை பராமரிப்பு துறை தஞ்சாவூர் மண்டலம் இணைந்து நடத்திய உலக வெறி நோய் தடுப்பு தினம் அரசு கால்நடை மருத்துவமனை பேராவூரணியில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குனர் தஞ்சாவூர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேராவூரணி ரோட்டரி சங்கம் தலைவர் ஜி .முருகுவளவன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் ஏ .ஆர். அன்பு முன்னிலை வகித்தார். என் .பி .நீலகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார் .பேராவூரணி பகுதியில் உள்ள நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. கால்நடை மருத்துவர் ஏ.ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள் திருக்குமரன் அருந்ததி கால்நடை மருத்துவ உதவியாளர் ஜீ.இந்திராணி கால்நடை பராமரிப்பு ஆர்.அமிர்தவல்லி, ஜி. பாஸ்கரன் உள்ளிட்ட குழுவினர் மருத்துவ பணி செய்தனர் .ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சி.குமார்
எம். அப்துல்லா,
எஸ். முருகானந்தம் ,
சி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .விழா நிறைவில் துணைச்செயலாளர் ஜி.சிதம்பரம் நன்றி கூறி பேசினார்.

டாக்டர். வேத குஞ்சருளன்
நிருபர்
பேராவூரணி
9626400100