Time: 11:52 AM

பேராவூரணியில் திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து  கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் 

பேராவூரணி செப்.28–
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகில்
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, காவிச் சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும், சமூக விரோதிகளை கண்டித்தும்,
தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி,  பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமை வகித்தார். திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், சந்திரமோகன், மதியழகன், குழ.அரங்கசாமி, சோம.நீலகண்டன், 
திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், நகரச் செயலாளர் கோ.நீலகண்டன், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத், இலக்கிய அணி ஆனந்தராஜ், 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு பா.பாலசுந்தரம், ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் சித்திரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் மைதீன், தமிழக மக்கள் புரட்சி கழகம் பைங்கால் மதியழகன், மனித நேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், தமிழ் வழிக் கல்வி இயக்கம் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், திராவிடர் விடுதலைக் கழகம் தா.கலைச்செல்வன்,

மருத.உதயகுமார், மதிமுக நகரச் செயலாளர் க.குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

டாக்டர். வேத குஞ்சருளன்
நிருபர்
பேராவூரணி
9626400100