பட்டுக்கோட்டை,ஜூன்.28
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுந்தரி.
இவர்களது மகள்கள் சண்முகப்பிரியா (23) ,கௌசல்யா
(22) சந்தியா (21) பெளசியா (19) இவர்களுபைய தம்பி ராஜாவசந்தசேனன் (16). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன் (60), இவரது மனைவி சரோஜா (55). இவர்களது மகன் குருபிரபு (28, இந்நிலையில் ராஜாவசந்தசேனனும், குருபிரபுவும் கடந்த 25ம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது
ராஜாவசந்தசேனை குருபிரபு கிண்டல் செய்ததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில்
குருபிரபு ராஜாவசந்தசேனனை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால்
ராஜாவசந்தசேனின் அக்கா 4 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் குருபிரபு வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்கும்போது இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குருபிரபு, அவரது அப்பா குபேந்திரன், அம்மா சரோஜா ஆகியோர் இவர்களை அசிங்கமாக திட்டி, மண்வெட்டியால் சண்முகப்பிரியாவை அடித்தனர். இதை தடுக்க சென்ற மற்ற சகோதரிகள் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது சண்முகப்பிரியாவை பரிசோதித்த டாக்டர் அவர்
இறந்துவிட்டதாக தெரிவித்தார். கௌசல்யா. சந்தியா, பெளசியா ஆகிய 3 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்முகபிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்து போன சண்முகப்பிரியா முதுநிலை
பட்டப்படிப்பு படித்து சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இறந்துபோன சண்முகப்பிரியாவின் தங்கை சந்தியா (21) பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, எஸ்.ஐ. ரவிச்சந்திரன் ஆகியோர் குருபிரபு அவரது அப்பா குபேந்திரன், அம்மா சரோஜா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதே நிலையில் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் குருபிரபு, குபேந்திரன் சரோஜா ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் 3 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குருபிரபு (28) பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, எஸ்.ஐ. ரவிச்சந்திரன் ஆகியோர் சபாலோக், செல்வமுருகன், சேவாக், கௌசல்யா, சந்தியா, சண்முகபிரியா, பெளசியா,
ராஜவசந்தசேனன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.