அதிரை வானவில், மே, 06
ஐக்கிய அரபு நாடுகளின் ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட பயங்கர தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்த பலரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஷார்ஜாவின் அல் நஹ்டா பகுதியில் உள்ள 48 தளங்களைக் கொண்ட அப்கோ டவரில் திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய வேகத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் ஏழு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.