Time: 1:39 PM

அதிராம்பட்டினம் பகுதியில் ஏடிஎம்களில் பணம் இல்லை பொதுமக்கள் அவதி

அதிராம்பட்டினம்;,மே;.28:

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால் அதிராம்பட்டினம் பகுதி மக்கள் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் பல்வேறு; வங்கி கிளைகள் இயங்கி வருகிறது. அதிராம்பட்டினம் பகுதி வங்கியில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அதிக அளவில் இருக்கும். பணம் எடுப்பவர்களுக்கு வசதியாக பல்வேறு பகுதிகளில்; ஏடிஎம் மையம் உள்ளது.

கடந்த ஒருமாதமாக இந்த  ஏடிஎம் இயந்திரங்களில் சரிவர பணம் நிரப்பப்படுவதில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது.

ஏடிஎம் பெரும்பாலான நேரங்களில் மூடிக்கிடக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களிலும் சரிவர  பணம் நிரப்பாததால் வங்கி கிளையில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் நீண்டவரிசையில் நிற்கவேண்டியுள்ளது. வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் தற்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் கிழக்குகடற்கரை சாலையில் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏடிஎம் மில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் சார்பில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்திற்கும் மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றனர்.