Time: 8:28 AM

மகன் செய்துகொடுத்த காலை உணவு..! சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகிறார். குடும்பத்தினருடனான சந்தோஷமான நிகழ்வுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். நேற்று அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் பெட்டில் இருக்கிறார்; அருகில் ஒரு தட்டில் உணவு இருக்கிறது. அந்தப் புகைப்படத்துக்கு அருகில், ‘இது என் மகன் தயாரித்த காலை உணவு. நான் உண்ட காலை உணவுகளிலேயே இதுதான் சிறந்தது’ என்று பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

Comments are closed.