Time: 6:45 AM

பட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு

பட்டுக்கோட்டை , ஜூலை 19 : பட்டுக்கோட்டையில் நகர வர்த்தக சங்க அவசர கூட்டம் நேற்று நடந்தது . நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார் . கூட்டத்தில் பட்டுக்கோட்டையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை நகரில் உள்ள மருந்து , பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது . கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பங்கேற்றனர்