Time: 8:12 PM

பேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 07

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.பரசுராமன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுவூப்பினர் கே.ராமச்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை விளக்க உரையினை அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அ.நாவல்ரன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஜே.ராஜசேகரன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசாணை எண் 72,நாள்
02 – 07-2020 ன்படி பள்ளி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு உணவு பொருட்களாக வழங்க உத்திரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சத்துணவுத் திட்டத்தில் தினமும் ஒரு முட்டை, இஞ்சி, பூண்டு, மிளகு கொண்டகடலை. பாசிபயறு ஆகியவற்றை பயன்படுத்தி சூடாக சமைப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவே, பள்ளி சத்துணவு மையங்களில் உணவு சமைத்து வழங்கிட தமிழக முதல்வரை உத்திரவிட வேண்டுகிறோம்.
கொரோனா காலத்தில் சமூக சமையலறையில் சமைத்த சத்துணவு ஊழியர்களுக்கும், சோதனைச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியமும், பயணபடியும் வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக சமையலறையில் சமையல் செய்து வழங்கியதற்கு 62 நாட்களுக்குரிய உணவு தயாரிப்பு செலவின தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதினை 58 விருந்து 59 ஆக உயர்த்தப்பட்டதுபோல் குறைந்த ஊதியம் பெறுகின்ற சமையலர், உதவியாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கு நிர்ணயித்துள்ளதுபோல் 60 வயதாக உயர்த்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமூக இடைவெளி கடைபிடித்து, முககவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறைவில் சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பொருளாளர் கே.மூர்த்தி நன்றி கூறினார்.