Time: 7:59 PM

பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

பேராவூரணி ஜூலை 3 
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பேராவூரணி சார்பில் தேசிய எதிர்ப்பு தின போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ. நாவலரசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் எல். சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார் .வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் அ.க. தங்கராசு சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ,தொகுப்பூதியம் மதிப்பூதியம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் ,மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும் ,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும்போது உயிரிழக்கும் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது .அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்