Time: 7:57 PM

அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிராம்பட்டினம், ஜூலை 03
அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து  அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்கவேண்டும், கட்டுமானம், ஆட்டோ, கைத்தறி, சுமை, மீனவர், அமைப்பு சாரா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க வேண்டும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 40 கோடி மக்களுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிடு, நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை ஏற்றார். மற்றும் ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஏ.எச் பசீர் அகமது, கே. பிச்சமுத்து, எம்.சுப்பிரமணியம், எம்.முகமது இக்பால், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.