Time: 7:55 PM

அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் வளர்ப்பு பண்ணையில்  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மாத்தாங்குடி காலனி பகுதியை சேர்ந்தவர். சின்ன கண்ணு இவரது மகன் பாஸ்கரன் வயது 40. இவர் கடந்த ஆறு மாத காலமாக ஏரிப்புறக்கரையில் உள்ள இறால் பண்ணையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலை பார்த்து வந்த இறால் பண்ணைக்கு அருகில் உள்ள பண்ணையில் மின் இணைப்பு பழுது பட்டதை அடுத்து அதை சரி செய்வதற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாஸ்கரனை அருகில் இருந்தவர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனம் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.