Time: 1:07 PM

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 300 பேருக்கு கப சுரக் குடிநீர் வழங்கல் – (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம், ஜூன் 24
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்  பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று காலை  10 மணி முதல் 12.30 வரை வழங்கப்பட்டது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் தலைமையில் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன்  கப சூரக் குடிநீரை வழங்கப்பட்டது, இதில் 300க்கும் மேற்பட்டோர் கப சூரக் குடிநீரை வாங்கி அருந்தினர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.