Time: 10:38 PM

பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

பட்டுக்கோட்டை , ஜூன் 13

பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு தெற்கு தெரு வைச் சேர்ந்தவர் ராஜ சேகரன் . இவரது மனைவி செந்தில்குமாரி ( 37 ) . இவர் தனது நாத்தனாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் காசாங் காட்டிலிருந்து புறப்பட்டு ஆலத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் . நாட் டுச்சாலை வயல் அருகே சென்றபோது இவருக்கு பின்னால் பைக்கில் வந்த 2 பேர் செந்தில்குமாரியை வழிமறித்து முகவரி கேட் பதுபோல் நடித்து அவரை தாக்கி ஐந்தே முக்கால் பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பறந்தனர் .

புகாரின்பேரில் பட்டுக்கோட்டை இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து செந்தில்குமாரி யின் கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற வர்களை தேடி வருகிறார் . இதன் மதிப்பு சுமார் ரூ 1 லட்சம் ஆகும் .