Time: 11:44 AM

பட்டுக்கோட்டையில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

கோவில்களை திறக்கக் கோரி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெரு ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் முன்பாக GV(A)G.வெங்கடேஷ் இந்து முன்னணி நகர தலைவர் தலைமையில் வழிப்படுவதற்கு கோயில்களை திறக்க கோரி ஒற்றைக் காலில் நின்று நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்து முன்னணியினர். கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. அன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள், இந்து கோவில்கள் மூடப்பட்டு ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதியளிக்கப்பட்டன. அன்று முதல் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு கோவில்களில் பக்தர்களும் அனுமதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு வழிபாட்டுத்தலங்களை கடந்த ஜூன் 8 திங்கள் கிழமை முதல் திறக்க அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு கோவில்களை திறக்கச் சொல்லி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று  நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர துணைத் தலைவர்கள் இ ராம. வீ பாலமுருகன்  பெரமையன் ஆகியோர் கலந்துகொண்டனர்