Time: 8:40 AM

பட்டுக்கோட்டை வியாபாரிகளிடம் 3 மாத வாடகை ரூ .4.20 லட்சம் வாங்காத 91 வயது டாக்டர் மனிதநேயத்திற்காக குவியும் பாராட்டுகள்

பட்டுக்கோட்டை , ஜூன் 6
தஞ்சை மாவட் டம் பட்டுக்கோட்டை பெரியத்தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் டாக் டர் ரத்தினம் ( 91 ) . தனக்கு சொந்தமான கட்டிடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார் . அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டிருந்தது . ரத்தினம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் எப்படி நமக்கு வாடகை தர முடியும் என்று நினைத்த டாக்டர் ரத்தினம் கடந்த மார்ச் , ஏப்ரல் , மே ஆகிய 3 மாதங்களுக்கும் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார் . இந்த கடைகளில் மாதம் ரூ .1.40 லட்சம் வாடகை வரும் . 3 மாதங்களுக்கும் வாடகையான ரூ .4.20 லட் சத்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் . இந்த மனிதநேய மருத்துவரை பட்டுக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும் , வியாபாரிகளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர் . இதுகுறித்து டாக்டர் ரத்தினம் கூறுகையில் , கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் வழங்கியுள்ளேன் . வியா பாரிகள் கஷ்டப்படும்போது அதை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்வோம் என்று 3 மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று கூறினேன் என்றார்