Time: 9:50 AM

அதிராம்பட்டினத்தில் வடமாநில தொழிலாளர்கள் 139 பேர் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு- அதிகாரிகள் நடவடிக்கை

அதிராம்பட்டினம்,மே,19
அதிராம்பட்டினம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட தொழில் தினக்கூலி உணவகங்கள் உள்ளிட்ட வேலைகளுக்காக வடமாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வேலைகளும் முடங்கிப் போன நிலையில் இவர்கள் வேலை இல்லாமலும் திரும்ப அவர்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும்  தவித்து வந்தனர் இதை அடுத்து அவர்கள் அவரவர்களது சொந்த  ஊருக்கு திரும்ப செல்ல விருப்பம் தெரிவித்து அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் வட்டாட்சியர் அருள்பிரகாசம் ஆகியோர் இந்தப் பகுதியில் உள்ள 139 வடமாநில தொழிலாளர்களை 4 பேருந்துகள் மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பஸ்களில் ஊருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்கள் செல்லும் பேருந்துகளில் தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி தெளித்து இவர்கள் பஸ்சில் ஏற்றப்பட்டனர். தஞ்சை வரை பேருந்துகளில் சென்று பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் கிராம அதிகாரி விஏஓ அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்,