Time: 8:17 PM

மதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்

மதுக்கூர், 01

மதுக்கூர் அருகில் வசித்துவருபவர் பிரபு(வயது 45)  விவசாயி இவருக்கு இதே பகுதியில் உள்ள  ஒரு பெண்ணிடம் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் பிரபு அவரது மனைவியுடன் வாழாமல் தனித்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபு வின் மகன் ரோஷன் பிரபு வயது 17 ,தனது தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பாக இருப்பதால் தான் தனது தாயுடன் சேர்ந்வாழாமல் உள்ளார் என ஆத்திரமாக இருந்தார் பிரபுவின் மகன் ரோஷன் பிரபு(வயது 17). இதனால் 30-03-2020 அன்று இரவு 8.30 மணியளவில் ஆனந்த ஈஸ்வரி வீட்டிற்கு  ரோஷன் பிரபு,அவரது கூட்டாளி இன்பகவி(வயது 18) ஆகியோர் சென்று பிரபுவிடம் பழக கூடாது என்று கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத ஆனந்த ஈஸ்வரி பதிலுக்கு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஆனந்த ஈஸ்வரியின் தலையில் கட்டையால் இருவரும்  அடித்து உள்ளனர். இதில் மயக்கமடைந்து சரிந்து விழுந்த ஆனந்த ஈஸ்வரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்த ஈஸ்வரி இறந்து விட்டார்.இச்சம்பவம் குறித்து ஆனந்த ஈஸ்வரி கனவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் சப். இன்ஸ்பெக்டர் வரலட்சுமி ரோஷன் பிரபு, இன்பகவி மீதுவழக்கு பதிவு செய்தார்.குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் மதுக்கூர் போலிஸார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.