Time: 11:39 AM

அதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் ஜனவரி 13

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இந்து முன்னணி, இந்து இளைஞர் முன்னணி இணைந்து வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 158 வது ஜெயந்தியை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை ஹிந்து முன்னணி அலுவலகம், பழஞ் செட்டித் தெரு பஸ்நிறுத்தம், பிள்ளைமார் தெரு, சால்ட்டு லைன், மாரியம்மன் கோவில் தெரு ,சுப்பிரமணியர் கோவில் தெரு ,பாரதியார் தெரு, சேது ரோடு ,முத்தம்மாள் தெரு ,சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்ற அலுவலகம் ,ஆகிய இடங்களில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவப் படத்தை வைத்து புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் திரு விஜயகுமார் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், இந்து முன்னணி பட்டுக்கோட்டை ஒன்றிய பொதுச் செயலாளர் நாக அருணாசலம் அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி தலைவர் ஹரிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.