Time: 4:57 PM

பேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .

பேராவூரணி ஜன 09
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேது ரோட்டில் உள்ள கடை எண் 5ல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொது விநியோக திட்ட சார் பதிவாளர் சடையப்பன்,செயலாளர் ஆர்.தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுபொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசை மக்களுக்கு கொடுத்து விழாவை தொடக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சுந்தர்ராஜன், சு. நீலகண்டன், கோவி. இளங்கோ,நகர செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, ப.அருண்சேகரன் , கொன்றைகாடு கணேசன்உள்ளிட்ட கட்சி நிருவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.