Time: 4:55 PM

பேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

பேராவூரணி ஜன09:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நாளை 10ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற இருக்கிறது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் சமூக சேவகர் டாக்டர்
வேத .குஞ்சருளன் தலைமை வகிக்கிறார். பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி சி.கே.ஜெபமாலை வரவேற்று பேசுகிறார். பட்டுக்கோட்டைமாவட்ட கல்வி அலுவலர் ஆர்.ஜெயபால், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், ஆதனூர் பங்கு தந்தை ஏ.எம். லூர்துசாமி அடிகளார், ஆதனூர் சேகரம் உதவி குரு டி.சார்லஸ் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆண்டறிக்கையை தலைமையாசிரியை ஜெஸி லிட்டில் ரோஸ்வாசிக்கிறார்.
விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி, மதுரை முத்து, இளம் புரட்சியாளர் மக்கள் சட்ட உரிமைகள் கழக பொதுச் செயலாளர் யு.வசந்த், மக்கள் சட்டம் மாத இதழ் ஆசிரியர் எஸ்.செல்வராஜ், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தர்ராஜன் , அருட்தந்தையர்கள் விஅடைக்கலராஜ் அடிகளார், எம்.ஆரோன் அடிகளார், எம்.ஏ. ஸ்டீபன்ராஜ் அடிகளார், டி.தேவசாகயம் அடிகளார், தலைமையாசிரியர்கள் அருட்சகோதரிகள்ஆர்.அருள் வசந்தி, பட்டுக்கோட்டை அ.லீமாரோஸ், புனல்வாகல் டீ.அக்சீலியா ஜெயந்தி, புதுக்கோட்டை சி.ஜோஸ்பின்மேரி, நோவூரணி ஏ. கருணாநீதி, சி.சுகுணா, குருவிக்கரம்பை வி.மனோகரன், தாளாளர்கள் முனைவர் ஜீ.ஆர்.ஸ்ரீதர், வி.ராமநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இரவு மதுரை முத்து, கோவி.தாமரைச்செல்வன், அண்ணா .சிங்காரவேலு, கவிஞர் ராஜநிதி, தேவகோட்டை எஸ்.ராஜன் ஆகியோரின் நகைச்சுவை விருந்தும், பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.