Time: 5:24 AM

அதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

அதிராம்பட்டினம். டிசம்பர் 30

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் செடிகொடிகள் நன்கு வளர்ந்து சாலை மறைக்கும் வகையில் மண்டி கிடப்பதால் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த செடி கொடிகள் மறைந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் போய்விடுகிறது. இதுதவிர நாய் மற்றும் ஆடு, மாடுகள் செடி கொடிகளிலிருந்து திடீரென வெளிவருவதால் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுனர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.இதுபோல இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதிகமாக விபத்து ஏற்பட்டு காயமடைந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உடனடியாக பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பிரதான சாலையில் இருபுறங்களிலும் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.