Time: 5:21 AM

அதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு

அதிராம்பட்டினம் டிசம்பர் 30

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது அதிரை எப்எம் வானொலி நிலையம்.இது கடந்த மூன்று வருடங்களாக சமூகம் மற்றும் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பல நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.இந்நிலையில் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது நாலாம் ஆண்டு துவங்கி உள்ளதை அடுத்து இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டார்.அப்போது அவர் வானொலி நிலையம் பற்றியும் அதில் உள்ள கருவிகள் செயல்படும் விதங்கள் பற்றியும் ஆசியாவிலேயே முதன்மை வானொலி நிலையமாக இலங்கை வானொலி நிலையம் வருவதற்கான காரணம் பற்றியும் அங்கிருந்தவர்களிடம் விளக்கிக் கூறினார்.

இதைத்தொடர்ந்து நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.