Time: 12:14 PM

அதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை

அதிராம்பட்டினம் டிசம்பர் 29

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மர்மமான முறையில் இளம்பெண் துாக்குப்போட்டு, இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிராம்பட்டினம் மேலத்தெரு சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவரது மனைவி அல்பாத், 23. இருவருக்கும் இரண்டு அரை வருடம் திருமணமாகி, நிலையில் கணவன் சாகுல்ஹமீது கல்யாணமான மூன்றே மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் .

இந்நிலையில், நேற்று மாலை அல்பாத் மர்மமான முறையில் துாக்கில் இறந்த நிலையில் தொங்கினார். அல்பாத்வின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த குத்புதீன் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அல்பாத் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது

இதுபற்றி அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது