Time: 11:13 AM

அதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு

அதிராம்பட்டினம் டிசம்பர் 26

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை 8.45 மணி அளவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக சூரியனை நிலவு மறைக்கும் காட்சி படிப்படியாகத் தென்படத் தொடங்கியது. அப்போது சூரியனின் நடுப்பகுதியை முழுமையாக மறைக்காமல், 93 சதவீதம் அளவிற்கு மறைத்தது. இதனால், சூரியன் சிவப்பு நிற வட்ட வளையமாக தோன்றியது.

இதனையடுத்து அதிராம்பட்டினம் பகுதியில் அதிகளவில் வெளிச்சமாக காணப்பட்டது பொதுமக்கள் அனைவரும் கருப்பு கண்ணாடி கிளாஸ் கொண்டு பார்ப்பதும் செல்போன் மூலம் பார்ப்பதும் படம் பிடிப்பதும் போன்றவற்றில் ஈடுபட்டனர்…