Time: 10:29 AM

அதிராம்பட்டினத்தில் கிரகணத் தொழுகை!

அதிராம்பட்டினம், டிச 26

சூரியனின் மேல் பூமியின் நிழல் மேற்பரப்பைத் தாண்டும் போது கிரகணம் ஏற்படுகிறது.

இதற்காக அவரவர் சார்ந்த இறை நம்பிக்கையின் பிரகாரம் இறைவனை வணங்கி வழிபட்டு இக்கிரகணத்தால் தீங்கு நிகழாமல் வேண்டுவர் அவ்வகையில் இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட சூரிய கிரகணத்தை அடுத்து அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை சார்பில் (மஸ்ஜிதுல் அக்‌ஸா) மரைக்காப்பள்ளி வாசலில் சூரிய கிரகணத் தொழுகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இப்பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர் செய்தனர்.

தொழுகை நடத்தியவர் மரைக்காப் பள்ளியின் இமாம் அப்துல் காதர் ஆலிம்.

தொழுகைக்கு பிறகு மார்க்க போதகர் எம்.எ.அப்துல் லத்தீப் ஆலிம் (எல்.எம்.எஸ்) அவர்கள் சூரிய கிரகணத்தை பற்றி குர்ஆன் மற்று இறை தூதர் அவர்கள் போதிக்கும் விசயங்களை மக்களிடம் விளக்கி கூறினார்கள்.