Time: 5:50 AM

பேராவூரணி ஆதனூர் சிஎஸ்ஐ சர்சில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா

பேராவூரணி டிச26:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் சிஎஸ்ஐ திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இரவு பரிசளிப்பு விழாவிற்கு சேகரஉதவி குரு டி.சார்லஸ் தேவராஜ் தலைமை வகித்தார்.பாஸ்டர் டி.ஜேம்ஸ், சபை செயலாளர் எஸ்எம்ஐ.வில்சன், கிராம தலைவர் ஐ.மான்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மாவட்ட துணை செயலாளர் என். செல்வராசு, நகர செயலாளர் தனம்.கோ.நீலகண்டன், காங்கிரஸ் சேக் இப்ராம்ஷா, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக எஸ்எம்ஏ.ஆர்தர் அனைவரையும் வரவேற்றார். நோபிள் பிரவின் நன்றி கூறினார்.