Time: 4:00 PM

அதிராம்பட்டினத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

அதிராம்பட்டினம் டிசம்பர் 24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் விசே‌ஷ பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது. மேலும் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், மின்விளக்கு அலங்காரம் என்று கிறிஸ்து மஸ் பண்டிகை களைகட்டி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிராம்பட்டினத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசே‌ஷ பிரார்தனை நடைபெற்று வருகிறது.. இதனையடுத்து அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஆலயங்களில் இன்று 10 மணி, நாளை காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் கிறிஸ்து மஸ் திருப்பலி. நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் செய்தி, பவனி நடைபெறும்.