Time: 3:10 PM

அதிராம்பட்டினத்தில் சபரி ஐயப்பன் சுவாமிக்கு வெள்ளி கிரீடம்

அதிராம்பட்டினம் டிசம்பர் 24

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் குடும்பத்தினர் இவர் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள சபரி ஐயப்பன் ஆலயத்தில் உள்ள சபரி ஐயப்பன் சுவாமிக்கு புதியதாக வெள்ளியில் கிரீடம் செய்து கரையூர் தெரு மாரியம்மன் கோவில் ஆலயத்தில் பூஜைகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து சபரி ஐயப்பன் கோவில் குருசாமி மணி அவர்கள் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் வெள்ளி கிரீடத்தை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வண்டிப்பேட்டை சபரி ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் சபரி ஐயப்பனுக்கு கிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கரையூர் தெரு ஆறுமுகம் குடும்பத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சபரி ஐயப்பனின் அருள் பெற்று சென்றனர்.