Time: 12:57 PM

பேராவூரணி ஆதனூரில் இரு சபையினர் இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் விழா

பேராவூரணி டிச 24
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆதனூரில் கிறிஸ்துமஸ் ஐக்கியகீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை ஆதனூர் சேகரசபையும் , ஆதனூர் ஆர்சி சபையும் இணைந்து நடத்திய கிறிஸ்மஸ் ஐக்கியகீத ஆராதனை நிகழ்ச்சி ஆதனூர் தூய யோவான் ஸ்நானகன் தேவாலயத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ உதவி குரு டி.சார்லஸ் தேவராஜ் ,

ஆர்சி பங்கு தந்தை ஏ.எம். லூர்துசாமி அடிகளார் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் செய்தி அறிவித்தனர். இருசபை பாடல் குழுவினர்களும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி கிருஸ்துமஸ் நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி சுமார் 40 ஆண்டுகளாக இரு சபை மக்களும் ஒன்று கூடி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி வருவது குறிப்பிடதக்கது.