Time: 11:05 AM

அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை

அதிராம்பட்டினம் டிசம்பர் 24

தமிழகத்தில் அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. எனினும் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சூரியன் தோன்றாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அந்த நிலையில் தற்போது அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.