Time: 7:03 AM

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக  மதுக்கடைகள் 6 நாள்கள் மூடல்

தஞ்சாவூர் டிசம்பர் 24

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் 6 நாள்களுக்கு மூடப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் கூடிய மதுக்கூடங்கள் டிச. 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், டிச. 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரையும் மூடப்படுகின்றன. இந்நாட்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.