Time: 8:50 AM

பேராவூரணியில் தனிநபர்கள் பிரச்சனையால் சுடுகாடு அடைப்பு

பேராவூரணி டிச 22 .

தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி
தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் முத்திரையர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். இங்கு பொது சுடுகாடு உள்ளது. இதை முத்திரையர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் அவரது மகன் சந்திரன் ஆகிய இருவருக்கும் உள்ள தனிப்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக பொது சுடுகாட்டு பாதையை அடைத்து விட்டனர். இதனால் சுடுகாட்டை பயன்படுத்தி வரும் கிராம மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக பேராவூரணி வட்டாட்சியருக்கும்’ பேராவூரணி காவல்துறையினருக்கும் புகார் செய்யப்பட்டது. வட்டாட்சியரும், காவல் துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,”பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.