Time: 7:23 AM

பேராவூரணி குமரப்பா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பேராவூரணி டிசம்பர் 21

பேராவூரணி குமரப்பா பள்ளியில் நேற்று முன்தினம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் ஜி. ஆா். ஸ்ரீதா் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தாா். அறங்காவலா்கள் மா. கணபதி, எம். ராமு, ச. ஆனந்தன், அஸ்வின்ஸ்ரீதா், பள்ளி நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவித்து திறன்களை வெளிக்கொண்டு வரவும், தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை, அறிவியல் சாா்ந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மாணவப் பருவத்திலேயே புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து கையாள தெரிந்து கொள்ளவும், கணிதம், நகரும் பொருட்கள், உணவு, புதிய கண்டுபிடிப்பு முயற்சிகள், உள்ளிட்ட 10 தலைப்புகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

கண்காட்சியில் குமரப்பா பள்ளி முதல்வா் சுரேஷ், ஆசிரியா் மூா்த்தி, பெற்றோா்கள், ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியை காா்த்திகா நன்றி கூறினாா்.