Time: 9:00 PM

அதிராம்பட்டினம் வந்தடைந்த காமராஜர் பொற்கோயில் ரதம்-பொதுமக்கள் வரவேற்பு

அதிராம்பட்டினம் டிசம்பர் 15

காமராஜர் பொற்கோயில் ரதம் இன்று அதிராம்பட்டினம் வந்தடைந்தது.கடந்த 28ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காமராஜர் பொற்கோயில் ரத ஊர்வலம் துவங்கி சென்னை செல்லும் வழியில் நேற்று அதிராம்பட்டினம் வந்தடைந்தது. இதையொட்டி அதிராம்பட்டினத்தில் மஞ்சவயல் சேகர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அவர்களை வரவேற்று கௌரவித்தனர் .இதையடுத்து காமராஜர் பற்றிய குறிப்புகள் அடங்கிய கையேடுகளை காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிர்வாகிகள் பொது மக்களுக்கு வழங்கினார். இதுபற்றி காமராஜர் திருக்கோவில் சங்கத்தின் நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் திரைப்பட நடிகர் மூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில் முன்னாள் முதல்வர் காமராஜர் சாதி மத பாகுபாடின்றி ஏழை மக்களுக்காக உழைத்தவர். இவரை நினைவு படுத்தவும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்த ரத யாத்திரை துவங்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த 28ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த ரதயாத்திரை இமயமலை வரை சென்று மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து இந்த ரதயாத்திரை முடிவடைகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு காமராஜர் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது என்றனர். இந்நிகழ்ச்சியில் முத்து, காளிமுத்து, சொரிமுத்து,திலசுராஜ் கட்டபொம்மன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

அதிராம்பட்டினத்திற்கு இன்று காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை வந்தபோது. இதில் காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் திரைப்பட நடிகர் மூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.