Time: 6:07 AM

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மாடு முட்டி ஒருவர் பலத்த காயம்

அதிராம்பட்டினம் டிசம்பர் 15

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாடுகளை அதிகளவில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் அடிக்கடி நடந்த வண்ணமாக உள்ளது இந்நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடற்கரை தெரு பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா வயது 35 இவர் கிழக்கு கடற்கரைச் சாலையில் கிங்ஸ் ஷாப்பிங் மால் அருகில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது மாட்டுடன் மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பாட்ஷா மீது முட்டியது இதில் பலத்த காயமடைந்த நிலையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பல விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இனி விபத்துகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு?