Time: 10:51 AM

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை – பள்ளிக்கு விடுமுறை

அதிராம்பட்டினம் டிசம்பர் 14

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமமையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் இன்று காலை வரை அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் பேராவூரணி பட்டுக்கோட்டை மதுக்கூர் முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை யேடுத்து அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை விடுமுறை. விடப்பட்டது

இதேபோல், தமிழகத்தில் உள்ள தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.