Time: 1:10 PM

பேராவூரணி அருகே மனைவி அடித்து கொலை கணவன் கைது

பேராவூரணி டிச13

தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஆவணம் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா வயது(39) அவரது மனைவி ரேவதி வயது(35). ராஜா குடி போதையில் இருந்ததாகவும், அவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் தகராறு ஏற்பட்டு அதனை தொடர்ந்து ராஜா ரேவதியை தாக்கினாராம். இதனால் தலையில் அடிப்பட்டு ரேவதி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்கு உடன் விரைந்து சென்று சம்பவ தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார். இது தொடர்பாக திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை அடித்து கொன்ற கணவர் ராஜாவை கைது செய்தனர். உடல் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது . இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.