Time: 10:50 PM

பேராவூரணி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு விருது 

பேராவூரணி டிச.09-
தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹாஜா மைதீன்.
இவருடைய கல்விப்பணியை பாராட்டி, திருநெல்வேலி பசுமை நகர அரிமா சங்கம், திருநெல்வேலி டீம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற விழாவில், “சிறந்த கல்விச் சிந்தனையாளர்-2019 என்ற விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியரை பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா தேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித் தனர்.