Time: 11:17 AM

அதிராம்பட்டினம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர்கைது – இலங்கைக்கு கடத்தலா? போலீசார் விசாரனண

அதிராம்பட்டினம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில்   வாகன சோதனையில் 45 கிலோ எடை உள்ள கஞ்சா சிக்கியது இந்நிலையில் கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி வன்னிய பெருமாள் தலைமையில் செயல்பட்டு வரும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வெற்றிச்செல்வன் கோபால் கொடுத்த தகவலின்படி கடலோர டிஐஜி பவானீஸ்வரி எஸ் பி செல்வின் ராஜரத்தினம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரவி  உள்ளிட்ட போலீசார்கள் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியான பிள்ளையார் திடல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர் . அப்போது அந்த வழியாக வந்த ஸ்விப்ட் காரை வழிமறித்து ஆய்வு செய்தபோது அந்த காரின் டிக்கியில் 45 கிலோ கஞ்சா முட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அந்த காரையும் அந்த காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த சேகர் வயது 59 ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசுவநாதன் வயது 43 ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் கனி வயது 28 ஆகியோரை ஆகியோரை பிடித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்