Time: 6:58 PM

அதிராம்பட்டினத்தில் தீ விபத்து மீனவர் வீடு எரிந்து சாம்பல் – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

அதிராம்பட்டினம் 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இளங்கோ நகரில் வசிப்பவர் சின்னான் வயது 55. மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியதில் மின் கம்பத்திலிருந்து ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக  சின்னான் வீடு தீப்பிடித்தது. காற்றிறின் வேகம் அதிகம் இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் வீடு மற்றும் வீட்டில் உள்ள 1 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் இருபதாயிரம் ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதுபற்றி சின்னான் கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்