Time: 6:48 PM

அதிரையில் AFFA நடத்திய மாநில அளவிளான கால்பந்து போட்டியில் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணி சாம்பியன்

தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்திய 16 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த ஜீன் 21ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், ஆலத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, கண்டனூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, கேரளா, பொதக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், அதிரை AFFA , காயல்பட்டினம், கண்டனூர், காரைகால் ஆகிய 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன. இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம்  அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டம் கண்டனூர், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அணிகள் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் கண்டனூர் பாலையூர்  அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதன் பின்னர், மைதானத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கண்டனூர் அணிக்கு ரூ.30,016 ரொக்கம் மற்றும் வெற்றிக்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெற்ற காயல்பட்டினம் அணிக்கு  ரூ.20,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட்டன. முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர், தமிழ்நாடு கால்பந்து சங்க துனைத்தலைவர் உயர்திரு MK.சிவானந்தம், தஞ்சை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் திரு. வேலுச்சாமி, சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் உயர்திரு அருனாசலம் காதிர்முகைதீன் கல்லுரியின் தமிழ் துரை பேராசிரியர் செய்யது அஹமது கபீர், PKT முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் உயர்திரு கோபாலகிருஸ்னன் , இளைஞர் கால்பத்து கழகத்தின் தலைவர் எஸ். அகமது ஹாஜா, AFFA வின் தலைவர் MA. முகம்மது தமீம் ,AFFA வின் செயலர் எஸ் அகமது அனஸ் , AFFA வின் பொருளாளர்  N. சேக்தம்பி , AFFA வின் துனை செயலாளர் A. ஷமியுல்லாஹ்  AFFA வின் அமைப்பாளர் S.முகம்மது புகாரி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செர்மன் K இதிரிஸ் மரைக்கா PKT உடற் கல்வி ஆசிரியர் A. வாசுதேவன் , சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கச் செயலாளர் எம்.எப் முகமது சலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், ஆட்ட முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.