Time: 6:29 PM

அதிராம்பட்டினத்தில் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை மீட்டனர்

அதிராம்பட்டினம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான பழஞ் செட்டித் தெரு திரு மையா  கோவிலின் எதிர்ப்புறம் ஒரு செப்டிக் டேங்க் உள்ளது. இது சிமெண்ட் காரை போட்டு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் சுற்றி வந்த ஒரு பசு மாடு நேற்று முன்தினம் இரவு அந்த செப்டிக் டேங்குக்குள் விழுந்தது. இதையடுத்து அது வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக தவித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த மாட்டை வெளியில் கொண்டு வருவதற்கு போராடினார். இருந்தும் முடியாமல் போகவே இதுபற்றி அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சேர்மன் இத்ரீஸ் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். இத்ரீஸ் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல்  கொடுத்தார். தகவலறிந்து பட்டுக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த மாட்டை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.