Time: 3:21 PM

பர்மா அகதிகள் 5 பேர் அதிராம்பட்டினத்தில் பிடிபட்டனர் – போலீஸார் விசாரணை

அதிராம்பட்டினம் ஜூன் 29
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்    தரகர் தெரு மீனவ கிராமத்தில் ஹைதராபாத் பால்லாபூர் அகதிகள் முகாமிலிருந்து ரோகிங்கியா முஸ்லிம்(பர்மா) அகதிகள் சையது காசிம் வயது 39, டில் முகம்மது 56, முகமது சலிம் 40 , நூர் அலாம் 32 மற்றும் ஜியாவுல் ஹக் என்கிற 14 வயது சிறுவன் ஆகிய    5 ஐந்து பேர்  பள்ளிவாசல் பகுதியில்    நாங்கள் மீண்டும் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி நன்கொடை வசூல் செய்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த     அதிராம்பட்டிணம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும்  போலீஸார் அவர்களை   பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று    விசாரனை செய்து வருகின்றனர்,