Time: 7:17 AM

அதிராம்பட்டினம் அருகே கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – மீனவ குழந்தை களுக்கு கணினி பயிற்சி

அதிராம்பட்டினம் ஜூன் 29

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் தமிழக காவல் துறையில் கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. எனவே மீனவ கிராமங்களில் மீனவ மக்களுக்கு பயன்படும் வகையில் மீனவ குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி நடத்தப்பட்டு அதில் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த பட்டது. காவல் துறை துணை இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவுபடி டிஐஜி பவானீஸ்வரி எஸ்பி செல்வின், நாகரத்தினம் மற்றும் ஏடிஎஸ்பி இளங்கோவன், பட்டுக்கோட்டை ஆய்வாளர் சுபா ஆகியோர் அறிவுரைப்படி உதவி ஆய்வாளர்கள் ரவி மற்றும் மனோகரன் மற்றும் காவல் துறையினர் இணைந்துசேதுபாவாசத்திரம் பகுதியில் வெளிவயல் மீனவ கிராமத்தில் உள்ள ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில் தலைவர் பாலாஜி உதவியுடன் வெளிவயல் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டது.