Time: 12:34 PM

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பு

அதிராம்பட்டினம் 
 கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் அடுத்தடுத்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இந்திய கடற்கரை பகுதிகளில் பலத்த கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் படகு இறங்கு தளங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகள் தவிர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்க்ள் ஆகியோரிடத்தில் கடலோர காவல்படை போலீசார்கள் ஆய்வு செய்து வருகின்றனர் மீன்பிடிக்கும் மீனவர்கள் இடத்தில் முறையான ் ஆவணங்க  உள்ளதா என்று சரி பார்க்கப்பட்டு வருகிறது இது தவிர கடலோரப் பகுதியில உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது மேலும் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் அல்லாத அந்நிய நபர்கள் உள்ளனரா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது