Time: 6:56 AM

அதிராம்பட்டினத்தில் தொடர் மழையினால் உப்பளப் பணிகள் நிறுத்தம்

அதிராம்பட்டினத்தில் தொடர் மழையினால் உப்பளப் பணிகள் நிறுத்தம்

Adiraivanavil
அதிராம்பட்டினம்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இடை இடையே பெய்து வருவதால் உப்புபு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத் தோட்டம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்ததால் உப்பு உற்பத்தித் தொழில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த பருவமழை துவங்கியதையடுத்து கடந்த 10 தினங்களாக இடை இடையே மழை பெய்து வந்தது.இதையொட்டி வாரப்பட்ட உப்புக்களை மட்டும் பாதுகாப்பு செய்து மேலும் உப்பளப் பணிகளை ஆரம்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றி உப்பளத்தொழிலாளர்கள் கூறுகையில் இனிமேல் மழை காலம் என்பதால் உப்பு உற்பத்தியை நிறுத்தி விட்டோம் தற்போது வாரப்பட்ட உப்புக்களை மட்டும் வெளி மாநிலம் அதாவது கர்நாடகா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணி நடக்கிறது. இனிமேல் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தான் உப்பு உற்பத்தி துவங்கப்படும் என்றனர்.