Time: 7:00 AM

அதிராம்பட்டினத்தில் 3–வது நாளாக தொடர் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில்  பலத்த மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினத்தில் கடந்த 1–ந் தேதி காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழை பெய்த நிலையில் இன்றும்  3–வது நாளாக இந்த மழை நீடித்தது. அதிராம்பட்டினம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது  கூடிய கனமழையாகவும் கொட்டி தீர்த்தது.நேற்று காலை 6 மணிக்கு மேல் மழை சற்று ஓய்ந்தது. இருந்தபோதிலும் வானம் மப்பும், மந்தாரமுமாகவே காட்சியளித்தது. இதனால்  பள்ளி– கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படது மாணவ– மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை இந்நிலையில் இரவு 12 மணியளவில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் காலை 6 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்