Time: 9:28 AM

அதிராம்பட்டினத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய பேருந்து நிலையம்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில், எப்போதும் பேருந்துகளும், பயணிகளும் பரபரப்பாக வந்து செல்லும் காட்சியை காண மக்களின் எண்ணிக்கையை விட, பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மாடுகள் நடமாடி வருகின்றன பொழுதுசாய்ந்ததும் தொழுவத்துக்கு திரும்புவதுபோல, சில மாடுகள் அசை போட்டபடி ஓய்வாக படுத்திருந்தன.

இதுு பற்றி அதிரை இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது கூறுகைையில்

அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலை யத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பேருந்து நிலையத்துக்குள் அடிக்கடி மாடுகள் புகுந்துவிடுகின் றன. அதன் கழிவுகள் பேருந்து நிலை யத்தில் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்ற னர். எனவே, மாடுகள் உள்ளே நுழையாமல் இருக்கும் வகையில் பேருந்து நிலையத்தை சுற்றிலும் சுவர் அமைக்க வேண்டும். மேலும், குடிநீர், இருக்கை வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை யும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்