Time: 4:24 PM

அதிராம்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம் பெண் உடல் போலீஸார் முன்னிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு

Adiraivanavil. 31

அதிராம்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம் பெண் உடல் போலீஸார் முன்னிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மனோரா பாப்பாங்கண்ணி ஆற்றுப்பாலத்தில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்த மெடிக்கலுக்கு எதிரில் டாடா ஏஸ் வாகனம் ஓட்டுபவர் மழையுர் அருகே உள்ள அதிரான்விடுதியை சேர்ந்தவர் நாகராஜ்.

நாகராஜுக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இருவரும் அடிக்கடி ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி ரோட்டில் உள்ள ஆரஸ்பதி காட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதேபோல் சம்பவத்தன்று இருவரும் சந்தித்து உல்லாசமாக இருக்கும் போது கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் இதனையடுத்து நாகராஜ் கஸ்தூரிக்கு தண்ணீர் தெளித்து பார்த்து அவர் இறந்ததை உறுதி செய்ததாகவும் இந்நிலையில் கஸ்தூரியின் உடலை ஒரு சாக்கில் சுற்றிய நாகராஜ் அவரது வண்டியில் ஏற்றி பேராவூரணி வழியாக மல்லிப்பட்டினம் சென்று ஆற்றில் போட்டு விட்ட நாகராஜ் வண்டியை திருச்சியில் நிறுத்திவிட்டு சென்னை சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி கஸ்தூரியின் பெற்றோர்கள் கஸ்தூரியை காணவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த விசாரணையில் கஸ்தூரியும் நாகராஜ்ம் ஒன்றாக சேர்ந்து சென்றதும் அவர்கள் காதலிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜ் தான் கஸ்தூரியை அழைத்துச் சென்றிருப்பார் என்ற சந்தேகத்தில் ஆலங்குடி போலீசார் நாகராஜை தொலைபேசியில் மூலம் அழைத்து வரவழைத்து அவரிடம் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் கஸ்தூரி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அதிராம் பட்டினம் அருகே கஸ்தூரியின் உடலை தேடிப்பிடித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதனையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையை இளம்பெண் கஸ்தூரியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் ஆலங்குடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.