Time: 7:00 AM

அதிராம்பட்டினத்தில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து தானும் விஷம் அருந்தி மகனுக்கும் கொடுத்ததில் கணவன் சாவு மகன் உயிர் ஊசல்

அதிராம்பட்டினத்தில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து தானும் விஷம் அருந்தி மகனுக்கும் கொடுத்ததில் கணவன் சாவு மகன் உயிர் ஊசல்

அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளி கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சாமித்துரை இவரது மகன் முருகானந்தம் வயது 35. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருத்திரைப்பூண்டி யைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மகள் மகேஸ்வரிக்கும் 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ஹரிஹர சுதன் (வயது 7), சரண் வயது 3 என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகானந்தத்திற்கும் மகேஸ்வரிக்கும் இடையே கடந்த 18ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேஸ்வரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்த நிலையில் முருகானந்தம் மனைவி மகேஸ்வரியிடம் சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு மகேஸ்வரி மறுத்து விட்டார். இதையடுத்து மனமுடைந்த முருகானந்தம் விஷத்தை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்று விஷத்தை கூல்டிரிங்சில் கலந்து முதலில் முருகானந்தம் குடித்துவிட்டு பின்னர் மூத்த மகன் ஹரிஹர சுதனிடம் கொடுத்துள்ளார்சந்தேகம் அடைந்த அவன் குடிக்க மறுத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டான். ஆனால் 3 வயது மகன் சரண் வாங்கிக் குடித்துவிட்டான். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகானந்தம் பட்டுக்கோட்டை செல்லும் வழியிலேயே இறந்தார். மிகுந்த ஆபத்தான நிலையில் சரண் தஞ்சை தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மிகுந்த கவலைக்கிடமாக  உள்ளார். இதையடுத்து முருகானந்தம் தாயார் ராணி கொடுத்த புகாரின் பேரில் அதிராம் பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.